திருவாரூர்: நன்னிலம் அருகே பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு இழுத்தடிப்பு செய்த அதிகாரியால் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வேலங்குடி ஊராட்சிக்குட்பட்ட கமுகக்குடி கிராமத்தைச் சேர்ந்த லெனின் என்பவரது மகன் மணிகண்டன் வயது 25. இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் கூரை வீட்டில் வசித்து வந்த மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரதம மந்திரி வீடு திட்டத்தின் கீழ் வீட்டின் எதிர்ப்புறம் உள்ள இடத்தில் வீடு கட்ட ஆரம்பித்துள்ளனர்.
அப்போது தன்னிடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஓவர்சியர் மகேஸ்வரன் என்பவர் 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டதால் கடன் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.மேலும் ஒன்று மற்றும் இரண்டாம் தவணைப் பணம் பெறுவதற்கான வீட்டு வேலையை அவர் முடித்திருக்கிறார். இரண்டாவது தவணைக்கான பணம் வங்கி கணக்கில் ஏறியவுடன் அதிலும் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக மகேஸ்வரன் கேட்டதால் அதையும் மணிகண்டன் கொடுத்துள்ளார்.
பின்னர் மூன்றாவது தவணை பணம் ஏற்றுவதற்கான வேலையை முடித்த பின்னரும் வீட்டின் ரூப் வேலையை முடித்தால்தான் மூன்றாம் தவணை பணம் ஏற்ற முடியும் என்று ஓவர் சியர் மகேஸ்வரன் கூறியதால் தான் வெளிநாடு செல்ல வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 36 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று கம்பி வாங்கி வீட்டின் ரூப் வேலையை முடித்ததாக தெரிகிறது.ரூப் வேலை முடிந்தும் மூன்றாவது தவணை பணம் ஏற்றி விடாமல் ஓவர்சியர் மகேஸ்வரன் இழுத்தடிப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மணிகண்டன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து லஞ்சம் வாங்கிய ஓவர்சியர் மகேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மணிகண்டன் தற்கொலைக்கு முன்பு இதுகுறித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து பேரளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.