மாவட்ட எல்லைகளில் இருக்கும் பேருந்து நிறுத்தம் வரையில் பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

1 September 2020, 2:19 pm
Karur MR VijayaBaskar - updatenews360
Quick Share

சென்னை : மாவட்ட எல்லைகளில் இருக்கும் பேருந்து நிறுத்தம் வரையில் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்றுடன் 7வது கட்ட ஊடங்கு நிறைவடைந்த நிலையில், இன்று முதல் மாவட்டங்களுக்குள் பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. இந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து ஆய்வு நடத்திய அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது :- கொரோனா வைரஸ் பாதுகாப்பு வழிகாட்டு முறைகளுடன் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லைகளில் இருக்கும் பேருந்து நிறுத்தம் வரையிலும் பேருந்துகள் இயக்கப்படும். பேருந்து சேவைகளை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து பேருந்து சேவை விரிவுபடுத்தப்படும். இரவு 9 மணி வரையில் மட்டுமே பேருந்துகள் இயங்கும். மார்ச் மாதம் எடுத்த பழைய பஸ் பாஸ் செப். 15ம் தேதி வரை செல்லுபடியாகும்,” என்றார்.

Views: - 6

0

0