பேருந்து டிக்கெட்டுகளும் ஐஆர்சிடிசி இணையதளத்தில்… புதிய நடைமுறை விரைவில் அமல்..!!!!

6 February 2021, 7:00 pm
irctc- updatenews360
Quick Share

ரயில் மற்றும் விமான பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவுகளை போன்று, பேருந்து பயணங்களுக்கான டிக்கெட்டுக்களையும் ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அனைத்து மூலைகளுக்கும் விமானம் மற்றும் ரயில்களின் மூலம் சென்று வருவதற்கான டிக்கெட்டுக்கள், இந்திய ரயில்வே உணவு சேவை மற்றும் சுற்றுலா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ஐஆர்சிடிசியில் முன்பதிவு செய்து கொள்ளும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், பேருந்து பயணங்களுக்கான டிக்கெட்டுக்களையும் ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரத்யேக செயலியை உருவாக்கும் பணி நடந்து வருவதால், மார்ச் மாதம் இந்த முறை நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சேவைக்காக 22 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களின் சாலை போக்குவரத்து மற்றும் தனியார் பேருந்து நிறுவனங்களுடன் ஐஆர்சிடிசி ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Views: - 0

0

0