செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் சி அணி அறிவிப்பு : தமிழக வீரர்கள் 7 பேருக்கு வாய்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 July 2022, 3:02 pm
Olympiat - Updatenews360
Quick Share

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி,தமிழகத்தில் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

குறிப்பாக,ஆண்கள் பிரிவில் 188 அணிகளும்,பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்கின்றன.இந்நிலையில்,செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் சி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில்,தமிழகத்தை சேர்ந்த வீரர்களான கார்த்திகேயன்,சேதுராமன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட இரண்டு அணிகளில் வைசாலி என்ற ஒரு பெண், பிரக்ஞானந்தா, குகேஷ், அதிபன், சசிகிரண் உள்ளிட்ட 5 தமிழக வீரர்கள் ஏற்கனவே இடம் பெற்றிருந்த நிலையில்,தமிழகத்தை சேர்ந்த மேலும் இருவர் இடம் பெற்றுள்ளனர்.

இதன்மூலம் இந்தியா சார்பில் மொத்தம் 25 வீரர்கள் பங்கேற்கும் நிலையில்,அதில் தமிழக வீரர்கள் 7 பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 114

0

0