‘நீட்’டை எதிர்க்கும் சூர்யா இப்படி செய்யலாமா?…கொந்தளிக்கும் திரையுலகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 November 2021, 2:17 pm
Jai bheem Issue -Updatenews360
Quick Share

நடிகர் சூர்யாவுக்கும், நீட் தேர்வுக்கும் அப்படி என்னதான் பொருத்தமோ தெரியவில்லை, எந்தவொரு விஷயம் என்றாலும் அவர் நீட் தேர்வு வலைக்குள் சிக்கிக் கொண்டு விடுகிறார்.

வெளியான ஜெய்பீம் திரைப்படம்

அப்படித்தான், தற்போது அவர் தியேட்டர் அதிபர்களிடமும், அரசியல் கட்சித் தலைவர் ஒருவரிடமும் வசமாக சிக்கிக்கொண்டு படாதபாடு படுகிறார். அண்மையில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள, ஜெய் பீம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

Jai Bhim (2021) - IMDb

இந்தப் படம் ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை ஒரு பக்கம் இருக்க, தனது படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்ற கேள்விதான், இப்போது சூர்யாவுக்கு பெரும் குடைச்சலை கொடுத்திருக்கிறது. தனது படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதோ, ஓடிடியில் வெளியிடுவதோ அவருடைய தனிப்பட்ட உரிமை.

தாபாவில் படத்தை வெளியிட்ட ரசிகர்கள்

ஆனால் அதற்கு நேர்மாறாக, நடிகர் சூர்யாவின் திருப்பூர் மாவட்ட ரசிகர்கள், ஜெய்பீம் படத்தை திருப்பூரில் உள்ள தாபா ஹோட்டல் ஒன்றில் விதிமுறைகளை மீறி திரையிட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இதேபோல் மாநிலத்தின் பல ஹோட்டல்களில் திரையிடுவோம் என்று துணிச்சலாக சூர்யாவின் ரசிகர்கள் அறிவித்ததாகவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

Jai Bhim - Suriya 39 First Look and Title Revealed | Prakash Raj, Rajisha  Vijayan | 2D Entertainment - YouTube

“இப்படி செய்வது கொஞ்சமும் நியாயம் அல்ல, இது முழுக்க முழுக்க சட்டவிரோதம்” என்று தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் போர்க்கொடி உயர்த்தி இருப்பதுடன் நடிகர் சூர்யாவுக்கு கடும் கண்டனமும் தெரிவித்து இருக்கிறது.

தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கண்டனம்

இதுபற்றி அச்சங்கத்தின் சங்க மாநிலத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறுகையில்,” தமிழக அரசின் திரைப்பட ஒளிப்பதிவு சட்டப்படி, உரிமம் பெற்ற தியேட்டர்களில் மட்டுமே திரைப்படங்களை வெளியிட முடியும். ஆனால், ‘ஜெய்பீம்’ படத்தை, பொது வெளியில், தாபா ஹோட்டல்களில் திரையிட அவரது ரசிகர்கள் முயற்சித்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தியேட்டரா, படமா... : எது தரம்? - திருப்பூர் சுப்பிரமணியம் - Dont restrict  in Business says Tirupur subramaniam

நடிகர் சூர்யா, ‘நீட்’ மற்றும் வேளாண் சட்டங்களை எதிர்த்து குரல் கொடுக்கிறார். தொடர்ந்து, சட்டவிரோதமான செயல்களை தடுப்பதில் முனைப்பு கொண்டவராக தன்னை அடையாளப்
படுத்திக் கொள்கிறார். ஆனால், அவருடைய ரசிகர்கள் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை அவர் தடுக்காமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

IFlicks: SIFFA to streamline extravagant spending in K'wood || SIFFA to  streamline extravagant spending in Kwood

முதலமைச்சரிடம் புகார்

சூர்யா மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும். இது போன்ற செயல்களால் தியேட்டர்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், தமிழக முதலமைச்சருக்குப் புகார் அனுப்பியுள்ளோம்.
‘ஓடிடி’ படங்களை பொது வெளியில் திரையிட சட்டவிதிகளின்படி அனுமதியில்லை. அவ்வாறு திரையிட்டாலும், அரசின் அனுமதி பெறவேண்டும்” என்று குறிப்பிட்டனர்.

Suriya, Sivakumar and Karthi donate Rs 1 crore to Tamil Nadu CM Relief Fund  - Movies News

ஓடிடியில் வெளியாகும் சூர்யா ஜோதிகா படங்கள்

இதுகுறித்து, கவலை தெரிவித்த தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் சிலர்,
“சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் தொடர்ந்து தங்களின் திரைப்படங்களை ஓடிடி தளத்தில் மட்டுமே வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் நடிக்கும் படங்கள் தவிர, தயாரிக்கும் படங்களையும் கூட ஓடிடியில்தான் வெளியிடுகின்றனர்.

Epitome Of Couple Goals: Suriya And Jyothika Redefined The Meaning Of Love  With Their Compatibility

இது சரியான செயல் அல்ல. இரண்டு மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் குறைந்தபோது தமிழகஅரசு 50 சதவீத ரசிகர்களுடன் தியேட்டர்களை திறக்க அனுமதித்தது. அப்போதும் சூர்யா தனது படத்தை தியேட்டர்களில் வெளியிட முன்வரவில்லை. 2 வாரங்களுக்கு முன் 100 சதவீத ரசிகர்களை அனுமதிக்கலாம் என்ற அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டது. அப்போதும் கூட அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

தியேட்டர் உரிமையாளர்கள் எச்சரிக்கை

ஏற்கனவே ஓடிடி தளத்தில் திரையிட ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தாலும் கூட இனி நடிக்கும் படங்களை தியேட்டர்களில் வெளியிடுவேன் என்று சூர்யா இதுவரை வெளிப்படையாக கூறவில்லை. அவர் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் இனி ஆயுசுக்கும் ஓடிடி தளத்தில் மட்டுமே அவர்,தனது திரைப்படத்தை வெளியிட வேண்டிய சூழல் உண்டாகும்.

கடந்த 6 மாதங்களாக அவரிடம், தான் பரமசிவன் கழுத்துப் பாம்பு என்ற நினைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் தன்னை யாரும் தட்டிக்கேட்க மாட்டார்கள் என்ற தைரியம் அவருக்கு மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் வந்துவிட்டது.

ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களை 6 மாதங்களுக்கு தியேட்டர்களில் வெளியிட முடியாது என்பதால், சூரரைப்போற்று படத்தை அதன்பிறகு திரையரங்குகளில் வெளியிடுவேன் என்று சூர்யா வாக்குறுதி அளித்தார். ஆனால் தியேட்டர்கள் திறக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் அவர் சொன்ன மாதிரி அந்தப் படத்தை தியேட்டர்களில் வெளியிடவில்லை.

Suriya comes out in support of Jyothika: 'Our kids should know that  humanity is more important than religion' - The Hindu

அனைத்து தரப்பு ரசிகர்களும் தனது படத்தை பார்க்க ஓடிடி தளங்களை நடத்தும் நிறுவனங்களுக்கு பல மடங்கு கட்டணம் செலுத்தும் நெருக்கடியை சூர்யா ஏற்படுத்திவிட்டார். இது கட்டண கொள்ளை. எல்லோரும் ஆண்ட்ராய்டு வசதி கொண்ட ஸ்மார்ட் போன்களும், கம்ப்யூட்டர்களும் வைத்திருப்பார்கள் என்று அவர் நினைப்பது தவறு. சாதாரண மக்களும் பார்க்க வேண்டுமென்றால் அவர் இனி தியேட்டர்களில் மட்டுமே தனது படங்களை வெளியிடுவேன் என அறிவிக்கவேண்டும்” என்று வலியுறுத்தினர்.

ஜான் பாண்டியன் கொடுத்த அதிர்ச்சி

இப்படி தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் நடிகர் சூர்யாவுக்கு எதிராக கொந்தளித்துப் போய் எச்சரிக்கை விடுக்க, இன்னொருபுறம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் நடிகர் சூர்யா, அவருடைய தந்தை சிவகுமார் ஆகியோரின் குணாதிசயம் பற்றி ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

Devendrar College of Physiotherapy

அவர் கூறும்போது, “ஒரு முறை கோவையில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்தேன். எனது பக்கத்து இருக்கைளில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா இருந்தனர். அப்போது எனக்கு சிவகுமார் மீது நல்ல மதிப்பு உண்டு. அருகில் இருந்ததால் நலம் விசாரித்தேன். அப்போது சூர்யாவுடன் சிலர் போட்டோ எடுக்க முயன்றனர், அதை பார்த்து சிவகுமார் என்னிடம் நீங்கள் சூர்யாவுடன் போட்டோ எடுக்கக் கூடாது என்றார்.

சிவக்குமாருக்கு சாதி வெறி

நான் அப்படியே ஷாக் ஆகிபோனேன். ஏனென்றால் என்னிடம் லட்சம் பேர் போட்டோ எடுக்க நிற்கிறார்கள். நான் ஏன் அவரிடம் போய் போட்டோ எடுக்க போகிறேன். சுத்தமான ஜாதி வெறி சிவகுமாருக்கு உள்ளது என்பதை அப்போதுதான் புரிந்து கொண்டேன். அப்படிபட்டவர்கள்தான் சிவகுமார், சூர்யா குடும்பத்தினர். இதுவரை யாரிடமும் சொல்லாத விஷயத்தை முதல் முறையாக வெளியே சொல்கிறேன்” என்று மன வேதனையுடன் தெரிவித்தார். இது தொடர்பாக ஜான் பாண்டியன் அளித்த பேட்டியும் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Fan tries a selfie with Sivakumar. What happens next is unbelievable -  Movies News

சினிமாவில் கதாநாயகனாக ஏழை, பட்டியல் இன மக்களுக்காக உயிரை கொடுத்து காப்பதுபோல நடிக்கும் நடிகர்கள் பலர் நிஜ வாழ்க்கையில் உள்ளக்குள் வன்மத்தை வைத்துக் கொண்டு இப்படித்தான் கபட நாடகம் ஆடுகின்றனர் என்ற கடும் விமர்சனமும் பொதுவெளியில் எழுந்துள்ளது.

Views: - 633

0

0