செந்தில் பாலாஜி குற்றமற்றவர்னு முதலமைச்சர் வாயை திறந்து சொல்ல முடியுமா? வானதி சீனிவாசன் கேள்வி!!

கோவை மாநகர் மாவட்டத்தின் சார்பாக தேசிய தலைமை முடிவு செய்தபடி ஜூன் ஒன்றாம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வெகுஜன தொடர்பு இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இன்று மாநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக இருந்தவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கட்சியின் மூத்த காரியத்தர்கள், அனைவருக்கும்மான அரங்க கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாஜக கடந்த 9 ஆண்டு காலமாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்திருக்கக் கூடிய சாதனைகளைப் பற்றி மத்திய அரசின் திட்ட பயனாளிகளை சந்திப்பது அவர்களுடன் கலந்துரையாடுவது கட்சி நிர்வாகிகளோடு தனித்தனியாக சந்திப்பு என இந்த மாதம் முழுவதும் பாஜகவினர் நாடு முழுவதும் பிஸியாக உள்ளனர்.

கோவையை பொருத்தவரை தனித்து நின்ற போதும் கூட உள்ளாட்சிப் பிரதிநிதிகளை பாஜக பெற்றிருந்தது. பாஜகவிற்கென இப்பகுதியில் குறிப்பிடத்தக்க வாக்கு சதவிகிதத்தை எப்பொழுதும் வைத்துக் கொண்டிருக்கிறோம்.

தற்போதும் கூட சட்டப்பேரவையில் பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினரை கோவை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். எங்களுடைய வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

இன்று வந்திருக்கக்கூடிய முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள்க்கும் சரி போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் சரி அவர்களை எப்படி கட்சி பணிகள் தீவிரமாக ஈடுபடுத்துவது அவர்கள் பகுதியில் அவர்களுக்கு இருக்கின்ற செல்வாக்கை எப்படி மேம்படுத்துவது?. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆக அவர்களை மாற்றிக் கொள்வதற்கு அவர்கள் வெற்றி பெறுவதற்கு எம்மாதிரியான மோடி அரசின் திட்டங்களை எடுத்துச் செல்வது என்பதை பற்றி இந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்படும்.

தமிழகத்தின் சூழல் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாக்கா தற்போது வேறு நபர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது என தெரிவித்த அவர் செந்தில் பாலாஜியை முன்னாள் அமைச்சர் என குறிப்பிட்டார்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உடல் நிலை காரணமாக தற்போது அவர் மருத்துவமனையில் இருக்கிறார். இந்த கைதுக்கும் விசாரணைக்கும் மாநில அரசை நடத்துபவர்கள் மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எல்லாம் சேர்ந்து கண்டன அறிக்கை விடுவது கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் பாஜகவை பிரதமரை இதற்கெல்லாம் குறிப்பிட்ட அரசியல் கட்சி தான் காரணம் என்கின்ற ரீதியில் மக்கள் முன்பு தவறான கருத்துக்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மாநிலத்தின் முதல்வர் எங்களை யாரும் மிரட்டி பார்க்க முடியாது பணிய வைக்க முடியாது எனக் கூறி வருகிறார். அவர் மத்திய பாஜக அரசை சொல்கிறாரா?, இல்லை தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தை கூறுகிறாரா? என புரியவில்லை.

அரசியல் ரீதியாக பாஜக மீது பழி சுமத்த முடியுமா என முதல்வர் பார்க்கிறார். அவரை துன்புறுத்துகிறார்கள் எனக் கூறும் இவர்கள் அவர் தவறு செய்யவில்லை என எங்கேனும் கூறி இருக்கிறீர்களா?, செந்தில் பாலாஜி குற்றமற்றவர், அவர் அமைச்சராக இருந்த காலத்தில் எந்த தவறும் செய்யவில்லை என்று முதலமைச்சரால் சொல்ல முடியுமா?. ஆக ஒருபுறம் இதற்கு முன்பாக நீங்கள் பேசியது இதெல்லாம் சினிமா படத்தில் வருவதைப் போல் இதெல்லாம் நீங்கள் தானா என்று கேட்பது போல் உள்ளது.

அமலாக்கத்துறை விசாரணை என்பது உச்சநீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டு அதன்படி நடந்து கொண்டிருக்கிறது. முழுமையாக விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது சம்பந்தப்பட்ட நபர்களுடைய கடமை. அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது மாநில அரசாங்கத்தின் கடமை.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரே மேடையில் ஒன்றாக நிற்பதற்கு வாய்ப்பு கிடைத்தது என்று கூறி மக்களை திசை திருப்புவதற்காக நாடகத்தை எல்லாம் நடத்த வேண்டாம் மக்கள் நம்பப் போவதில்லை.

பாஜக அண்மை காலமாக எவ்வளவு ஊழல் நடக்கிறது என கூறிக் கொண்டே வருகிறோம். அப்போதெல்லாம் ஆதாரம் கேட்ட செந்தில் பாலாஜி தற்போது ஆதாரத்தை கொண்டு வந்து காண்பித்த பிறகு அய்யய்யோ துன்புறுத்துகிறார்கள் என்னை மிரட்டி பார்க்கிறீர்களா என கூறுகிறார்கள்.

இதற்கெல்லாம் ஆதாரம் அமலாக்கத்துறையிடம் உள்ளது. அதற்கான பதிலை அவர் நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம். நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற மனபாங்கிலிருந்து முதலமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் முதலில் வெளியில் வரவேண்டும்.

குற்றம் செய்பவர்களின் மாமன் மச்சான் மாப்பிள்ளை யாராக இருந்தாலும் சட்டப்படி அவர்கள் எதை எதிர் கொள்ள வேண்டுமோ அதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். தற்போது நடவடிக்கை எடுத்திருப்பது கட்சி ஆட்சி கிடையாது தற்போது நடவடிக்கை எடுத்திருப்பது நீதிமன்றம்.

சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதுதான் பாஜகவின் கொள்கை.
திமுகவிற்கே சம்பந்தம் இல்லாமல் பொய் பேசுவது தான் பழக்கம். DMK பைல்ஸ் அடுத்தது அறிவிக்கப் போகிறோம் என மாநில தலைவர் கூறி இருக்கிறார் அறிவிக்கட்டும் பார்க்கலாம்.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு வீட்டிற்கும் கொலுசு, ஹாட் பாக்ஸ், கொடுத்ததை எல்லாம் பார்த்துள்ளோம். தேர்தலின் போது கூட எனது தொகுதியிலேயே திமுகவினர் பணம் கொடுத்தார்கள். மத்திய அரசில் இருக்கின்ற ஒவ்வொரு துறையும் சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

அந்தத் துறைகளுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சீமான் பேசிய அத்தனை உரிமைகளும் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு இருக்கக்கூடிய ஜனநாயக நாடாக இந்த நாடு உள்ளது. அவரது பேச்சு உரிமையை அவர் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

பாஜக ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் கூட பாஜக கட்சியினரே இந்த நிலைமைக்கு ஆளாகியுள்ளார்கள், பணமதிப்பிழப்பு உட்பட பல்வேறு விஷயங்களில் தவறு செய்திருந்தால் கூட பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவில்லை. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கிறார்கள்.

செந்தில் பாலாஜி முதல்வர் குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கிறார் முதல்வரின் மனதிற்குள் போய்விட்டார். முதல்வரையே திட்டியவர் எப்படி அவரது மனதிற்குள் சென்று விட்டார் என்பதை அவரிடம் கேட்டு தான் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

18 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

20 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

20 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

20 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

21 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

22 hours ago

This website uses cookies.