பாஜகவினர் உயிரோட இருக்க முடியாதா? வெத்து மிரட்டலுக்கு நாங்க பயப்படமாட்டோம் : அண்ணாமலை வார்னிங்!!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், ” நான் அரசியலுக்கு வந்தபோது, அண்ணாமலையின் தந்தை கூட பிறந்திருக்கமாட்டார். ஆனால் இப்போது அண்ணாமலை போன்ற அரைவேக்காடுகளுக்கு பதில் கூற வேண்டியுள்ளது . திராவிடம் என்ற சொல்லைக் கேட்டால் சிலருக்கு வேப்பம் காயாக கசக்கிறது. ஆகையால் தான் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது திராவிட மாடல் ஆட்சி என்றார்.அண்ணாலை என்ன பேசுகிறார், எதை பேசுகிறார் என்று தெரியவில்லை.

இவருக்கு எப்படி ஐ.பி.எஸ் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அண்ணாமலை சொல்வதில் ஒன்று கூட உண்மையில்லை. ஜெயலலிதாவின் ஆளுமையை, அண்ணமாலை அவருடைய தாய், மனைவியுடன் ஒப்பிட்டு பேசுகிறார். அண்ணாமலை மிரட்டலாம் என்று பார்க்கிறார். நாங்கள் இந்திரா காந்தியை பார்த்தவர்கள், மிசாவை சந்தித்தவர்கள், சர்காரிய கமிஷனை தவிடு பொடியாக்கிய கட்சி என்பதனை அண்ணாமலை உணர்ந்து கொள்ள வேண்டும். பாஜகவினர் உயிருடன் இருக்க முடியாது” என்று கூறினார்.

இது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பா ஜ கவினர் உயிருடன் இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார் தி மு கவின் அமைப்பு செயலர் ஆர் எஸ் பாரதி தூத்துக்குடியில் பேசியிருக்கிறார். சட்ட மன்றத்தில் கொலை நடந்தாலும் வழக்கு தொடுக்க முடியாது என்று ஆளுநரை கொலை செய்வோம் என்று மிரட்டியதற்கு குறித்து மௌனம் காத்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்,தற்போது பாஜகவினரை கொலை செய்வோம் என்று மிரட்டியுள்ள ஆர்.எஸ் பாரதியை கைது செய்ய உத்தரவிட வேண்டும்.

ஆளும் கட்சி என்ற ஆணவத்தில், திமிரில் இது போன்று வன்முறையை தூண்டி சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் முயற்சியில் ஆர் எஸ் பாரதி பேசிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பதோடு, இதே போன்று கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதை முதலமைச்சர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது, அரசு நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்த முடியாத காரணத்தினால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் கெடுக்க ஆளும் தி மு கவே முயற்சி செய்கிறது என்றே எண்ணத்தோன்றுகிறது” என்று கூறியுள்ளார்.

இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், திமுக ஆட்சியில், தமிழக மக்கள் மற்றும் மற்ற அரசியல் கட்சித் தொண்டர்கள் தொடர்ச்சியாக அனுபவிக்கும் இன்னல்களை, பாஜகவினருக்கு கொலைமிரட்டல் விடுத்ததன் மூலம் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளார் திமுகவின் திரு ஆர்.எஸ்.பாரதி.

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே; ஊழல், கமிஷன், லஞ்சம் இல்லாத ஆட்சியை தமிழகத்தில் உருவாக்க விரும்பும் நாங்கள், இந்த வெற்று மிரட்டல்களுக்கு பயப்படப் போவதில்லை.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சாட்டையை சுழற்றுவேன் சுழற்றுவேன் என CM சொன்னார்.. ஆனால் சுழற்றியவர் PM : செல்லூர் ராஜு!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகிலேயே இந்த தீவிரவாதத்தை தடுக்க வேண்டும், எந்த நாட்டிலும் தீவிரவாதம் இருக்கக்…

3 minutes ago

பாஜகவுடனான ஆதாயத்திற்காக மதுரை ஆதினம் புகார்… அமைச்சர் பரபரப்பு கருத்து!

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைந்து ஐந்தாம்…

45 minutes ago

பயில்வான் VS திவாகர்- இன்ஸ்டாகிராம் நடிகர்னா இளக்காரமா? ரணகளமான பிரஸ்மீட்

வாட்டர்மிலன் ஸ்டார் இன்ஸ்டாகிராம் ரீல்ஸின் மூலம் தமிழ் இணையவாசிகளின் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டாக்டர் திவாகர். “கஜினி” திரைப்படத்தில் சூர்யா…

1 hour ago

அஜித் ரசிகர்கள் கண்ணியமானவர்கள்.. விஜய்யுடன் ஒப்பிட்டு திவ்யா சத்யராஜ் பதிவு!

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். அதை தவிர, திமுகவில் அண்மையில் இணைந்து பணியாற்றி வருகிறார்.…

1 hour ago

உன் மேல ஆசை.. உல்லாசமா இருக்கலாமா? புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய காவலர்!

பூந்தமல்லி பகுதியை சேர்ந்த பெண். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கடந்த மாதம் ஆவடி செக்போஸ்ட் அருகே வேலை…

2 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர்- விஜய்யின் டிவிட்டர் பதிவால் கொதித்தெழுந்த ரசிகர்கள்! என்னவா இருக்கும்?

ஆப்ரேஷன் சிந்தூர்  பஹல்காம் தாக்குதல் இந்தியர்களாகிய நம் அனைவரையும் உலுக்கிய சம்பவம் என்பதை நாம் மறந்திருக்க முடியாது. பயங்கரவாதிகளின் தாக்குதலால்…

2 hours ago

This website uses cookies.