நேற்று 4… இன்று 6 : சொந்தக் காசில் சூனியம் வைத்த நடிகை கஸ்தூரி!

Author: Udayachandran RadhaKrishnan
6 November 2024, 6:07 pm

சர்ச்சை பேச்சில் சிக்கிய கஸ்தூரிக்கு மதுரையில் அதிர்ச்சி கொடுத்த அமைப்புகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்றாம் தேதி ராஜநத்தம் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி திராவிட கழகம் குறித்தும் தெலுங்கு பேசுபவர் மற்றும் தெலுங்கு பெண்கள் குறித்தும் அவதூறு வார்த்தைகளை பேசி உள்ளார்.

இதை சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் பல்வேறு அமைப்பு சார்பாக கண்டனத்தை தெரிவித்த நிலையில் நேற்று சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் மதன, மொழி, குறித்து இரு வேறு மக்களிடையே பிரச்சனை ஏற்படுத்துவது என நான்கு பிரிவினுக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் இது தொடர்பாக நடிகை கஸ்தூரி வருத்தம் தெரிவித்ததோடு இதுகுறித்து எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சன்னாசி மதுரை திருநகர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். அதில் நடிகை கஸ்தூரி தெலுங்கு பெண்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகவும் நடிகை கஸ்தூரி மீதும் அது ஒளிபரப்பிய நம் தேசம் BHARATH என்ற youtube சேனல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதையும் படியுங்க: செவிலியருடன் அடிக்கடி செ***ஸ்.. பலமுறை கருக்கலைப்பு : சென்னையை உலுக்கிய டாக்டர்!

மேலும் தன் குடும்பத்தின் மீதும் பாதுகாப்பு கேட்டு புகார் அளித்துள்ளார். இதுகுறித்து திருநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Aadujeevitham Oscar selection மூன்றாவது முறை ஆஸ்காரை குறிவைக்கும் ஏ.ஆர்.ரகுமான்…எந்த படத்திற்கு தெரியுமா ..!
  • Views: - 415

    0

    0