முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு கொலை மிரட்டல் : சசிகலா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Author: Babu Lakshmanan
30 June 2021, 1:03 pm
sasikala - cv shanmugam - updatenews360
Quick Share

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சசிகலா மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சி.வி.சண்முகம் கடந்த 9ம் தேதி திண்டிவனம் ரோஷனை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.

அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது :- நான் கடந்த 7-ம் தேதி வி.கே.சசிகலா குறித்து ஊடகங்களில் சில கருத்துகளைத் தெரிவித்தேன். அதற்கு வி.கே.சசிகலா நேரடியாக பதிலளிக்காமல், தன் அடியாட்களை வைத்து செல்போன் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பேசியும், பதிவிட்டும் வருகிறார்கள். மேலும் செல்போனிலும் என்னை அச்சுறுத்தும் வகையில் 500 பேர் கொலை மிரட்டல் விடுத்தும் வருகின்றனர்.

CV Shanmugam - Updatenews360

செல்போன், சமூக ஊடகங்கள் மூலம் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. வி.கே.சசிகலா பற்றி பேசினால் உன்னையும், உன் குடும்பத்தையும் தொலைத்து விடுவோம் எனவும் மிரட்டுகிறார்கள். இதற்கு வி.கே.சசிகலாவின் தூண்டுதலே காரணமாகும். எனவே கொலை மிரட்டல் விடுக்கவும், ஆபாசமாக பேசவும் காரணமாக இருந்த வி.கே.சசிகலா மீதும், என் செல்போனுக்கு வந்த அழைப்புகளில் பேசிய மர்ம நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Sasikala - Updatenews360

இந்தப் புகாரின் அடிப்படையில் சசிகலா உள்ளிட்ட சிலர் மீது கொலை மிரட்டல், அநாகரிகமாக பேசுதல், அடுத்தவரை தூண்டிவிட்டு கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அச்சுறுத்தும் வகையிலான தகவலைப் பதிவிடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 203

0

0