காவிரி விவகாரத்தில் தமிழக உரிமைக்காக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும் : பிரதமருடனான சந்திப்பிற்கு பிறகு எல்.முருகன் திட்டவட்டம்

3 July 2021, 2:07 pm
murugan - updatenews360
Quick Share

காவிரி விவகாரத்தில் தமிழக உரிமைக்காக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பிறகு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது ;- ராமேஸ்வரம், குமரி, மாமல்லபுரம் உள்ளிட்ட ஆன்மிக சுற்றுலா தலங்களை மேம்படுத்தக் கோரிக்கை வைக்கப்பட்டது. தென்தமிழகத்தில் புதிதாக தொழிற்சாலைகளை தொடங்க வலியுறுத்தினோம்.

நதி நீர் இணைப்பு உள்ளிட்ட தமிழக வளர்ச்சிக்கு தேவையான விவகாரங்களை கோரிக்கை வைத்துள்ளோம். காவிரி விவகாரத்தில் தமிழக உரிமைக்காக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும். நீட் குறித்த எதுவும் பேசவில்லை. நீட் தேர்வு நடப்பதை ரத்து செய்ய முடியாது, என தெரிவித்தார்.

Views: - 151

0

0