சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு

2 February 2021, 10:56 am
ICSE_Board_Exams_UpdateNews360
Quick Share

டெல்லி : 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறையை கல்வி நிறுவனங்கள் முன்னெடுத்தன. அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே ஆன்லைன் கல்வியை எடுக்க வேண்டும் என நீதிமன்றமும் உத்தரவை பிறப்பித்தது. இதனால், முழு பாடத்திட்டத்தையும் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, எதிர்வரும் தேர்வுகளில் மாணவர்களின் வசதிக்காக பாடத்திட்டங்களை குறைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

.நடப்பு கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வரும் பிப்ரவரி 2ம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தார். அதன்படி, இன்று பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகிறது.

Views: - 0

0

0