சிமெண்ட் விலையேற்றம் குறித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Author: Babu
29 July 2021, 7:35 pm
Quick Share

சென்னை : சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் சிமெண்ட் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, சிமெண்ட் விலையை உயர்த்தி வரும் உற்பத்தியாளர்களின் கூட்டுச்செயல் பற்றி விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கிளாஸ் 1 ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் வழக்கு தொடர்ந்தது. மேலும், இந்த சிமெண்ட் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்த தங்களுக்கு வரம்பு இல்லை என சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Views: - 125

0

0