மத்திய அமைச்சரவை 2.0 : மத்திய அமைச்சர்களும்… அவர்களின் துறைகளும்… முழு பார்வை…!!

8 July 2021, 11:11 am
Quick Share

டெல்லி : புதிதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட நிலையில், அமைச்சர்கள் மற்றும் அவர்களின் துறைகள் பற்றி தற்போது காணலாம்.

கடந்த 2019ம் ஆண்டு பதவியேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இதுவரையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. ஆனால், கடந்த இரு ஆண்டுகளில் மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா, சிரோமணி அகாலிதளம் கட்சிகள் விலகல் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான், சுரேஷ் அங்காடி ஆகியோரின் மறைவு, மத்திய அமைச்சர்களின் ராஜினாமா ஆகியவற்றால் புதிய அமைச்சரவை மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் எல்.முருகன் உள்ளிட்டோர் அடங்கிய 43 பேர் நேற்று மத்திய அமைச்சர்களாகவும், இணை அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

புதிய அமைச்சரவையில் யார் யாருக்கெல்லாம் இடம்… அவர்களுக்கான துறைகள் பற்றிய முழு விபரம் பின்வருமாறு :-

பிரதமர்‌ நரேந்திர மோடி – பணியாளர்‌ , அரசு ஊழியர்களின்‌ ஓய்வூதியம்‌, அணுசக்தி, விண்வெளி, அனைத்து முக்கிய கொள்கை விவகாரங்கள்‌, அமைச்சர்கள்‌ நியமிக்கப்படாத இதர துறைகள்‌
ராஜ்நாத்‌ சிங்‌ – பாதுகாப்புதுறை
அமித்‌ ஷா – உள்துறை மற்றும் கூட்டுறவு
நிதின்‌ கட்கரி – சாலைப்‌ போக்குவரத்து மற்றும்‌ நெடுஞ்சாலைகள்‌ துறை
நிர்மலா சீதாராமன் -‌ நிதி; கார்ப்பரேட்‌ விவகாரங்கள்‌ துறை
நரேந்திர சிங்‌ தோமர்‌ – வேளாண்மை மற்றும்‌ குடும்ப நலன்‌ துறை
எஸ்‌.ஜெய்சங்கர்‌ – வெளியுறவு துறை
அர்ஜுன்‌ முண்டா – பழங்குடிகள்‌ விவகாரம்‌ துறை
ஸ்மிருதி இரானி – மகளிர்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ நல மேம்பாடு துறை
பியூஷ்‌ கோயல்‌ – வர்த்தகம்‌ மற்றும்‌ தொழில்‌; நுகர்வோர்‌ நலன்‌; உணவு மற்றும்‌ பொது விநியோகம்‌; ஜவுளிதுறை
தர்மேந்திர பிரதான்‌ – கல்வி; திறன்‌ மேம்பாடு மற்றும்‌ தொழில்முனைவு துறை
பிரகலாத்‌ ஜோஷி – நாடாளுமன்ற விவகாரங்கள்‌; நிலக்கரி; சுரங்கங்கள்‌ துறை
நாராயண்‌ ராணே – குறு, சிறு, நடுத்தர தொழில்கள்‌ துறை (எம்‌எஸ்‌எம்‌இ)
சர்வானந்த சோனோவால்‌ – ஆயுஷ்‌, துறைமுகங்கள்‌, கப்பல்‌ மற்றும்‌ நீர்வழிப்‌ போக்குவரத்து துறை
வீரேந்திர குமார்‌ – சமூக நீதி மற்றும்‌ அதிகாரமளித்தல்‌ துறை
ஜோதிராதித்ய சிந்தியா – விமானப்‌ போக்குவரத்து துறை
ராமச்சந்திர பிரசாத்‌ சிங்‌ – உருக்கு துறை
அஸ்வினி வைஷ்ணவ்‌ – ரயில்வே, மின்னணு மற்றும்‌ தகவல்‌ தொழில்நுட்பம்‌துறை
பசுபதி குமார்‌ பாரஸ்‌ – உணவு பதப்படுத்தும்‌ தொழில்‌ துறை
கிரண்‌ ரிஜிஜு – சட்டம்‌ மற்றும்‌ நீதிதுறை
ஆர்‌.கே. சிங்‌ – மின்சாரம்‌; மரபுசாரா எரிசக்திதுறை
ஹார்தீப்சிங்‌ புரி – பெட்ரோல்‌, இயற்கை எரிவாயு; வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சிதுறை
மன்சுக்‌ மாண்டவியா – சுகாதாரம்‌ மற்றும்‌ குடும்ப நலன்‌; ரசாயனம்‌ மற்றும்‌ உரத்துறை
புருஷோத்தம்‌ ரூபலா – மீன்வளம்‌, கால்நடை வளர்ப்பு மற்றும்‌ பால்‌ பண்ணை வளர்ச்சிதுறை
ஜி.கிஷண்‌ ரெட்டி – கலாசாரம்‌; சுற்றுலா; வடக்கிழக்கு பிராந்திய வளர்ச்சி துறை
அனுராக்‌ சிங்‌ தாக்குர்‌ – தகவல்‌ மற்றும்‌ ஒலிபரப்பு; இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டுதுறை
பூபேந்தர்‌ யாதவ்‌ சுற்றுச்சூழல்‌, வனம்‌ மற்றும்‌ பருவநிலை மாற்றம்‌; தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்பு துறை
ராவ்‌ இந்தர்ஜித்‌ சிங்‌ – புள்ளியியல்‌ மற்றும்‌ திட்டச்‌ செயலாக்கம்‌, கார்ப்பரேட்‌ விவகாரங்கள்‌ துறை
ஜிதேந்திர சிங்‌ – அறிவியல்‌ தொழில்நுட்பம்‌, புவி அறிவியல்‌, பிரதமர்‌ அலுவலகப்‌ பணிகள்‌, நிர்வாகம்‌, பொதுமக்கள்‌ குறைபாடு, ஓய்வூதியம்‌, அணுசக்தி, விண்வெளித்‌ துறை

இணையமைச்சர்களும்… துறைகளும்….

ஸ்ரீபாத்‌ யசோ நாயக்‌ – துறைமுகங்கள்‌, கப்பல்‌-நீர்வழிகள்‌, சுற்றுலாத்துறை
ஃபகான்சிங்‌ குலஸ்தே எஃகு, ஊரக வளர்ச்சித்துறை
பிரகலாத்‌ சிங்‌ படேல்‌ – ஜல்‌ சக்தி, உணவு பதப்படுத்தும்‌ தொழில்த்துறை‌
அஸ்வனி குமார்‌ – நுகர்வோர்‌ பாதுகாப்பு, உணவு, பொது விநியோகம்‌, சுற்றுச்சூழல்‌, வனம்‌, பருவநிலை மாற்றம்‌ துறை
சாத்வி நிரஞ்சன்‌ ஜோதி – நுகர்வோர்‌ பாதுகாப்பு, உணவு, பொது விநியோகம்‌, ஊரக வளர்ச்சித்துறை
அர்ஜூன்ராம்‌ மேக்வால் -‌ நாடாளுமன்ற விவகாரம்‌, கலாச்சாரம்துறை‌
வி.கே.சிங்‌ – சாலைப்‌ போக்குவரத்து, நெடுஞ்சாலை, விமானப்‌ போக்குவரத்துத்துறை
கிருஷண்பால்‌ – எரிசக்தி, கனரக தொழில்துறை
தன்வே ராவ்சாகேப்‌ தாதராவ்‌ – ரயில்வே, நிலக்கரி, சுரங்கங்கள்‌ துறை
ராம்தாஸ்‌ அதாவலே – சமூகநீதி, அதிகாரமளித்தல்‌
சஞ்சீவ்‌ குமார்‌ பால்யன்‌ – மீன்வளம்‌, கால்நடை மற்றும்‌ பால்பண்ணை வளர்ச்சி,
எல்‌.முருகன்‌ – மீன்வளம்‌, கால்நடை வளர்ப்பு மற்றும்‌ பால்‌ பண்ணை வளர்ச்சி; தகவல்‌ மற்றும்‌ ஒலிபரப்பு
பங்கஜ்‌ செளத்ரி – நிதித்துறை
அனுப்ரியா படேல்‌ – வர்த்தகம்‌ மற்றும்‌ தொழில்‌துறை
சத்யபால்‌ சிங்‌ பகேல்‌ – சட்டம்‌ மற்றும்‌ நீதித்துறை
பானு பிரதாப்‌ சிங்‌ வர்மா – சிறு, குறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ (எம்‌எஸ்‌எம்‌இ)
கெளசல்‌ கிஷோர்‌ – வீட்டுவசதி மற்றும்‌ நகர்ப்புற வளர்ச்சித்துறை
பி.எல்‌.வர்மா – வடக்கிழக்கு பிராந்திய வளர்ச்சி, கூட்டுறவுத்துறை
அஜய்‌ குமார்‌ – உள்துறைத்துறை
ராஜீவ்‌ சந்திரசேகர்‌ – திறன்‌ மேம்பாடு மற்று தொழில்முனைவு; மின்னணு மற்றும்‌ தகவல்‌ தொழில்நுட்பம்‌
ஷோபா கரண்ட்லஜே – வேளாண்மை மற்றும்‌ விவசாயிகள்‌ நலன்‌துறை
ஏ.நாராயணசுவாமி – சமூக நீதி மற்றும்‌ அதிகாரமளித்தல்‌
பகவந்த்‌ குபா – மரபுசாரா எரிசக்தி; ரசாயனம்‌ மற்றும்‌ உரம்‌
தர்ஷணா விக்ரம்‌ ஜர்தோஷ் ‌- ஜவுளி; ரயில்வேத்துறை
செளஹான்‌ தேவுசிங் -‌ தொலைத்தொடர்புத்துறை
மீனாக்ஷி லேகி வெளியுறவு; கலாச்சாரம்‌ துறை

Views: - 137

0

0