மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 11% உயர்வு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

14 July 2021, 4:38 pm
south block 1 - updatenews360
Quick Share

சென்னை : மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 11 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்த மத்திய அரசு, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 3 தவணைகளுக்கு அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்தது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பெருமளவு செலவிடப்பட இருப்பதாகவும், போதிய வருவாய் இல்லாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதிதாக மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவை பங்கேற்றது. இந்தக்கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.

Views: - 99

1

0