கள்ளச்சந்தையில் மருந்து விற்பனையை தடுங்க : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்…!!

11 May 2021, 10:39 am
supreme_court_updatenews360
Quick Share

டெல்லி : கள்ளச்சந்தையில் மருந்துகள் விற்பனை செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. எனவே, போலி மருந்து விற்பனை மற்றும் கள்ளச்சந்தையில் மருந்துகள் விற்பனையை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- கள்ளச்சந்தையில் மருந்துகளை விற்பதை தடுப்பது மாநில அரசுகளின் அதிகார எல்லைக்குட்பட்டது. எனவே, கள்ளச்சந்தையில் மருந்துகளை விற்பனை செய்வதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கென சிறப்புக் குழுக்களை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் பதுக்கப்படுவதை தடுக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தையில் போலி மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 86

0

0