வீடு, வாகன வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டி தள்ளுபடி : மத்திய அரசு அறிவிப்பு

24 October 2020, 2:05 pm
Parliment 01 updatenews360
Quick Share

டெல்லி : ரூ. 2 கோடி வரையிலான வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்யப்படுவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதால், வங்கிக் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன் மற்றும் கிரெடிட் கார்டுக்கான தவணைத் தொகைகளை செலுத்துவதில் வாடிக்கையாளர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசு ஆணையிட்டது. அதன்படி, ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவின் பேரில், கடன் தவணைகளை செலுத்துவதில் அவகாசம் வழங்கப்பட்டது.

ஆனால், கடன் தவணை தொகையை செலுத்தும் காலத்தை அதிகரித்ததோடு, கடன் மற்றும் வட்டி சுமை அதிகரிப்பதை சுட்டிக் காட்டிய பல்வேறு தரப்பினர், இதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

Supreme_Court_UpdateNews360

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இருப்பினும், ரூ. 2 கோடி வரையிலான சிறு,குறு, நடுத்தர நிறுவன கடன்கள், கல்வி கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், தொழில்முனைவோர்களின் கடன்கள், கிரெட்டி கார்டு நிலுவைத் தொகையை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் 6 மாதத்திற்கான கூட்டு வட்டியை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ரூ. 2 கோடி வரையிலான கடன்களுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்யும் முடிவை மத்திய அரசு விரைவில் அமல்படுத்த வேண்டும் என்றும், இந்த முடிவை அமல்படுத்த மேலும் ஒரு மாதம் அவகாசம் கோருவது நியாயமில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வங்கிகள், நிதி நிறுவனங்களில் ரூ. 2 கோடிக்கும் குறைவாக கடன் பெற்ற பயனாளிகளுக்கு வட்டிச்சலுகைக்கான அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஸ்டேட் வங்கி உள்பட தேசிய வங்கிகளில் சிறு,குறு தொழில் கடன், கல்விக்கடன், வீட்டுக்கடன், நுகர்வோர் கடன் பெற்றவர்களுக்கு வட்டி மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடன் தவணை தள்ளி வைப்பு காலத்திலும் முறையாக கடன் தவணையை செலுத்தி வந்தவர்களுககு கேஷ் பேக் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 35

0

0