ஆர்டிஓ முன்பு வாகனம் ஓட்டி காட்ட வேண்டிய அவசியமில்லை : ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிகள் வெளியீடு..!!

11 June 2021, 4:41 pm
driving license - updatenews360
Quick Share

டெல்லி : ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றாலே ஓட்டுநர் உரிமம் வழங்கும் புதிய விதிமுறைகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றிருந்தாலும், ஆர்டி அதிகாரி முன்பு வாகனத்தை ஓட்டிக் காண்பித்தால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் புதிய நடைமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் ஓட்டுநர்களுக்கு, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வில் பங்கேற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜுலை 1ம் தேதி முதல் இந்த புதிய முறை அமலுக்கு வரு இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெறுவதன் மூலம், சாலை விபத்துக்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 160

1

0

Leave a Reply