தபால் அலுவலக சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத்தொகை அதிகரிப்பு…!!

12 November 2020, 8:25 am
post office - updatenews360
Quick Share

சென்னை: தபால் அலுவலக சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத்தொகையை அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மத்திய கோட்டத்தின் தபால் துறை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

தபால் துறை சார்பில் நடத்தப்படும் வங்கி சேவையில் சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத்தொகை இதுவரை ரூ.50 ஆக இருந்தது. இதனை ரூ.500 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்படி இந்த விதிமுறை கடந்த டிசம்பர் 12ம் தேதி நடைமுறைக்கு வந்தது. ஏற்கனவே, சேமிப்பு கணக்கு தொடங்கியவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகையை ரூ.500 ஆக உயர்த்திக்கொள்ள வரும் டிசம்பர் 11ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்புத்தொகையை ரூ.500 ஆக உயர்த்தாத பட்சத்தில் மார்ச் மாதம் முதல் அபராத கட்டணமாக வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ.100, ஒவ்வொரு ஆண்டும் கழிக்கப்பட்டு இருப்புத்தொகை குறைக்கப்பட்டு, கணக்கு காலாவதி ஆகிவிடும் என கூறப்பட்டுள்ளது.

Views: - 40

0

0