பாஜக ஆளும் மாநிலங்களுக்கு கூட இப்படியில்லையே… தமிழகத்திற்கு தாராளம் காட்டிய மத்திய அரசு..!!!

21 July 2021, 12:49 pm
pm modi tamilnadu - - updatenews360
Quick Share

இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கடன் உதவி வழங்கும் முத்ரா திட்டத்தில் பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழகத்திற்கே அதிக முக்கியத்துவம் மத்திய அரசு வழங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் அல்லாத, வேளாண் தொழில் சாராத நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் தொகை வழங்கும் முத்ரா என்னும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் கடனை பெற்றுக் கொள்ளலாம்.

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், சிஷு என்ற பிரிவின் மூலம் ரூ. 50 ஆயிரம் வரையிலும், கிஷோர் என்னும் பிரிவின் மூலம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் என்னும் பிரிவின் மூலம் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் இந்தத் திட்டத்தின் மூலம் 30 கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். ரூ.15.97 லட்சம் கோடி வரை கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2019 முதல் 2021ஆம் ஆண்டு நிதியாண்டில் 11.29 கோடி பயனாளர்களுக்கு ரூ.6.41 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில், அதிகபட்சமாக தமிழகத்திற்கு ரூ.63,150 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 1.20 கோடி பயனடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழகத்திற்கு கூடுதலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக பாஜகவினர் கூறுகையில், “தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து ஒதுக்குவதாக தற்போது ஆட்சியில் உள்ள திமுகவினர் கூறி வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பவர்களுக்கு, தொழில் தொடங்க மத்திய அரசு கடனுதவி வழங்கியுள்ளது. இந்தியாவில் தமிழகத்திற்குதான் அதிகளவில் நிதி வழங்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களை விட இது கூடுதலாகும்.

இதுவே தமிழகத்திற்கு பிரதமர் மோடி அளிக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது. தவறான புள்ளிவிபரங்கள் மற்றும் தகவல்களை கொண்டு பாஜக எதிர்ப்பு சிந்தனையை உருவாக்கும் முயற்சி என்றும் எடுபடாது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது போல, தமிழகத்தின் எதிர்காலம் இனி பாஜகதான் என்ற நிலை உருவாகும்,” எனக் கூறினர்.

Views: - 113

0

0

Leave a Reply