தமிழகத்திற்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் : மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி

26 November 2020, 11:21 am
Amit_Shah_Updatenews360
Quick Share

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று இரவு புதுச்சேரி – மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. ஆரம்பத்தில் அதி தீவிர புயலாக கரையைக் கடந்த புயல், பிறகு படிப்படியாக தீவிர புயலாகவே கரையை கடந்தது. இதனால், கடலூர் மாவட்டத்தில் புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில், நிவர் புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “புயல் கரையை கடந்த தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நிலவும் தற்போதைய நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்தேன். இரு மாநிலங்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசின் சார்பில் செய்து தரப்படும். ஏற்கனவே, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்,” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0