மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சரின் கார் மீது தாக்குதல் : அடங்காத திரிணாமுல் காங்., தொண்டர்களின் அட்டூழியம்..!!

6 May 2021, 3:36 pm
west bengal minister car attack - updatenews360
Quick Share

மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சர் முரளீதரனின் வாகனம் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இமாலய வெற்றி பெற்றது. இருப்பினும், அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். இதனால், ஆத்திரமடைந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மேற்கு வங்கத்தில் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக அலுவலகத்தை தீவைத்து கொளுத்தியதுடன், நிர்வாகிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதுடன், பெண் நிர்வாகிகளை பலாத்காரம் செய்து அராஜகத்தில் ஈடுபட்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், வன்முறை குறித்து ஆய்வு செய்வதற்காக மேற்கு வங்கம் சென்ற மத்திய அமைச்சர் வி.முரளிதரன் கார் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “மேற்கு மிட்னாபூர் பகுதியில் தனது கார் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். எனது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு, ஊழியர்கள் தாக்கப்பட்டனர்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Views: - 255

0

0