போலி திராவிட மாடல் சமூக நீதி முகமூடியை வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் கிழித்தெறிவார்கள் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
வெள்ள நிவாரண நிதி விவகாரம் தொடர்பாக மக்களவையில் திமுக எம்பி டிஆர் பாலு பேசிய போது, மத்திய இணையமைச்சர் முருகன் அமைச்சராக இருக்க தகுதியற்றவர் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவையில் இருந்த பாஜகவினர் எம்பி டிஆர் பாலுவின் இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், திமுக எம்பி டிஆர் பாலுவின் இந்த பேச்சுக்கு மத்திய இணையமைச்சர் எல் முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் X தளத்தில் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- திமுக-வின் போலி திராவிட மாடல் சமூகநீதி பிம்பம் இன்று மக்களவையில் வெளிப்பட்டுள்ளது.
சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் வாக்குகளுக்காக மட்டுமே அரசியல் செய்பவர்கள் திமுக-வைச் சேர்ந்த இந்த போலி திராவிட மாடல் சமூகநீதிக்காரர்கள். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்கும், அவர்களுக்குத் தேவையான திட்டங்களுக்கும் ஏற்ப பணி செய்ய நேரமில்லாதவர்கள், தேர்தல் காலங்களின் போது வெற்றி பெற உருவாக்கும் காகித குப்பையே ‘சமூகநீதி’ எனும் தேர்தல் அறிக்கை.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வளர்ச்சிப் பணிகளை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்கள், அவர்களுடைய கையில் எடுக்கும் ஆயுதம் தான் இந்த தரங்கெட்ட வார்த்தைகள். திமுக-வைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவிற்கு இந்த தரங்கெட்ட பேச்சு முதல் முறையல்ல. தன்னுடைய வாழ்க்கை முறையை அதற்கேற்ப வாழ்ந்து பழகியவர் இனியும் இதை நிறுத்தப் போவதில்லை என்பது தெளிவாகிறது.
சமூகநீதிக்கும் இவர்களுக்கும் இருக்கும் தூரத்தை இன்று காட்டியுள்ளார்கள். போலி திராவிட மாடல் சமூகநீதி பிம்பத்தை முகத்தில் மாட்டிக் கொண்டு திரியும் உங்களின் (திமுக) முகமூடியை, வருகின்ற தேர்தலில் மக்கள் கிழித்தெறிவார்கள் என்பதில் எந்த மாற்றமுமில்லை, எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.