உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு : முதலமைச்சர் குறித்து அவதூறு பேசியதால் நடவடிக்கை..!!!

12 January 2021, 5:39 pm
udhayanidhi - updatenews360
Quick Share

சென்னை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களை தரக்குறைவாக விமர்சித்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை ஆபாசமாக பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவரது கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இதனிடையே, உதயநிதி ஸ்டாலின் மீது சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், முதலமைச்சரின் நற்புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக பேசியிருப்பது தண்டனைக்குரியது என்பதால், அவர் மீது வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Views: - 10

0

0