தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!

3 November 2020, 3:50 pm
chennai metrology - updatenews360
Quick Share

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடுமென்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் மதுரை, சிவகங்கை, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், 5ம் தேதியன்று டெல்டா மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்க்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Views: - 19

0

0