தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

6 November 2020, 1:25 pm
chennai metrology - updatenews360
Quick Share

சென்னை: குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

chennai rain 1 - updatenews360

இதேபோல், அடுத்த 48 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், கடலூர் மற்றும் நீலகிரி, தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், அடுத்த 72 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில், சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Views: - 36

0

0