ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் : கைதான 3 பேருக்கு 10 நாள் போலீஸ் காவல்..!!

18 November 2020, 1:53 pm
chennai gun shoot - updatenews360
Quick Share

சென்னையில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேருக்கு 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தலில் சந்த் (74) சென்னை சவுகார்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 11ம் தேதி இவரையும், மகன், மனைவி ஆகியோரும் துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், ஷீத்தலின் மனைவி ஜெபமாலாவின் குடும்பத்தினர்தான் இந்த கொலைகளை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு, ஜெபமாலாவை தேடி வந்தனர். இந்த சூழலில், ஷீத்தலின் மனைவி ஜெபமாலா உள்பட 3 பேரை புனேவில் வைத்து போலீசார் கைது செய்தனர். பிறகு, அவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது, அவர்களுக்கு நவம்பர் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கைது செய்யப்பட்ட கைலாஷ், ரவீந்தரநாத், விஜய் உத்தம் ஆகிய 3 பேரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சென்னை போலீஸ் மனு தாக்கல் செய்தது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, 3 பேருக்கும் 10 நாள் போலீஸ் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.