சென்னை மாவட்ட அதிமுகவிற்கு புதிய நிர்வாகிகள் நியமனம் : அதிமுக தலைமை அறிவிப்பு

28 October 2020, 5:34 pm
Admk Executive- updatenews360
Quick Share

சென்னை : நிர்வாக வசதிக்காக சென்னையை 6 கட்சி ரீதியான மாவட்டங்களாக பிரித்து மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக நிர்வாக வசதியைக்‌ கருத்தில்‌ கொண்டும்‌, கழகப்‌ பணிகளை விரைவுபடுத்தும்‌ வகையிலும்‌, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும்‌ வட சென்னை தெற்கு, தென்‌ சென்னை வடக்கு, தென்‌ சென்னை தெற்கு ஆகிய மாவட்டங்கள்‌ கீழ்க்கண்டவாறு புதிய மாவட்டக்‌ கழகங்களாகப்‌ பிரிக்கப்பட்டு,
பின்வருமாறு சட்டமன்றத்‌ தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும்‌ என்பதையும்‌, மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்களாகக்‌ கீழ்க்கண்டவர்கள்‌ கீழ்க்காணும்‌ மாவட்டங்களுக்கு இன்று முதல்‌ நியமிக்கப்படுகிறார்கள்‌ என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

  1. வட சென்னை (தெற்கு கிழக்கு)
    ராயபுரம்‌
    திரு.வி.க. நகர்‌ (தனி)
    ஜெயக்குமார்‌, கழக அமைப்புச்‌ செயலாளர்‌
    மாண்புமிகு மீன்வளம்‌ மற்றும்‌ நிர்வாக சீர்திருத்தத்‌ துறை
  2. வட சென்னை தெற்கு (மேற்கு)
    எழும்பூர்‌ (தனி)
    துறைமுகம்

நா. பாலகங்கா
மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌
முன்னாள்‌ வாரியத்‌ தலைவர்‌

  1. தென்‌ சென்னை வடக்கு (கிழக்கு)
    சேப்பாக்கம்‌-திருவல்லிக்கேணி
    ஆயிரம் விளக்கு

ஆதிராஜாராம்‌
கழக அமைப்புச்‌ செயலாளர்‌
முன்னாள்‌ வாரியத் தலைவர்

  1. தென்‌ சென்னை வடக்கு (மேற்கு)
    தியாகராய நகர்
    அண்ணாநகர்‌

தி.நகர். பி. சத்தியா எம்எல்ஏ
மாவட்டக் கழக செயலாளர்

  1. தென்‌ சென்னை தெற்கு (கிழக்கு)

மைலாப்பூர்‌,
வேளச்சேரி

எம்.கே. அசோக் முன்னாள் எம்எல்ஏ
வேளச்சேரி சட்டமன்றத்‌ தொகுதி

  1. தென்‌ சென்னை தெற்கு (மேற்கு)

விருகம்பாக்கம்‌
சைதாப்பேட்டை

விருகை VN. ரவி
மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌

கழக அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச்‌ சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும்‌, கழக உடன்பிறப்புகளும்‌, சம்பந்தப்பட்ட மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கழகப்‌ பணிகளை ஆற்றிட வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்கிறோம்‌. கழகம்‌ மற்றும்‌ சார்பு அமைப்புகளுக்கு திருத்தி அமைக்கப்பட்ட நிர்வாகிகள்‌ நியமனம்‌ செய்யப்படும்‌ வரை, தற்போதுள்ள நிர்வாகிகள்‌ சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உட்பட்ட நிர்வாகப்‌ பொறுப்புகளில்‌ தொடர்ந்து செயலாற்றுவார்கள்‌ என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌, எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 44

0

0