அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவிப்பு…! பெற்றோர்கள், மாணவர்கள் ‘ஷாக்’
19 August 2020, 10:35 amசென்னை: கல்வி கட்டணம் கட்டவில்லை என்றால் பெயர் நீக்கப்படும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கல்விநிலையங்கள் திறக்கப்படவில்லை. எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கல்வி கட்டணம் பற்றிய முக்கிய அறிவிப்பை குறிப்பிட்டு உள்ளது.
அதாவது, கல்வி கட்டணத்துடன் ஆய்வகம், நூலகம், கல்லூரி வளர்ச்சி ஆகியவற்றிற்கான கட்டணத்தையும் இந்த மாத இறுதிக்குள் செலுத்திவிட வேண்டும். அபராதத்துடன் செப்டம்பர் 5ம் தேதிக்குள் கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி கட்டணம் செலுத்தாதவர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்படும் என்று அந்த அறிவிப்பில் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன. கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த தருணத்தில் கல்விக் கட்டணம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு, மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.