சென்னையில் தொழில் உரிமத்தை புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு

15 October 2020, 1:27 pm
Chennai Corporation-UpdateNews360
Quick Share

சென்னை : சென்னையில் தொழில் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் டிச.,31ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி வருவாய் துறையின் மூலம் பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்களின் 2020-2021ம் ஆண்டுக்கான உரிமம் கடந்த மார்ச் 31ம் தேதிக்குள் புதுப்பித்திருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, அறிவிக்கப்பட்ட தேதிக்குள் உரிமத்தை புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, தொழில் உரிமத்தை எந்தவித தண்டனைத் தொகையும் விதிக்கப்படாமல், நிறுவனங்களின் வசதிக்காக, டிச.,31ம் தேதி வரை தொழில் உரிமத்தை புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0