இ பாஸ் எளிதாக பெற இந்த ஒரு ஆவணம் போதும்…! சென்னை மாநகராட்சி ஆணையர் ‘பளிச்’..!

8 August 2020, 2:47 pm
Chennai corporation - updatenews360
Quick Share

சென்னை: ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி எளிதாக இ பாஸ் பெற்று கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அண்மையில் கொரோனா விவகாரத்தில் மாவட்டம் விட்டு  மாவட்டம் செல்பவர்களுக்கு இ பாஸ் அளிக்கும் விவகாரம் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. நியாயமான காரணங்களுடன் விண்ணப்பித்தால் இ பாஸ் கிடைப்பது இல்லை என்று புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக ஏராளமான இடைத்தரகர்கள் சிக்கினர். தமிழக அரசின் துரித நடவடிக்கைகளால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முதலமைச்சரும் விளக்கம் அளித்துவிட்டார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதை வேண்டுமென்றே சர்ச்சையாக்கி வருகின்றன.

இந் நிலையில் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி எளிதாக இ பாஸ் பெற்று கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட அயனாவரத்தில் கொரோனா  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:

தமிழகத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் விகிதம் அதிகம். கிட்டத்தட்ட 87.05% பேர் குணமாகி விட்டனர். தினசரி அடிப்படையில் பரிசோதனைகள் அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

ஆரம்ப கட்டத்தை விட அதற்கு வந்து நாட்களில் தொற்று குறைய மக்கள் முக்கிய ஒத்துழைப்பு கொடுத்தனர். ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு மிக எளிதாக இ பாஸ் பெறலாம்.

பொதுமக்கள் புரோக்கர்கள், தனி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்.  மாவட்டங்களுக்கு இடையிலான பயணத் தேவைக்கான இ பாஸ் முறையில் இருந்த சிக்கல்கள் நீக்கப்பட்டுவிட்டன. அவை எளிமைப்படுத்தி 35% வரை கூடுதலாக இ பாஸ்கள் வழங்கப்படுகின்றன என்றார்.

Views: - 6

0

0