நண்பகல் 12 மணிக்குள் பேனர், பதாகைகளை அகற்ற வேண்டும் : அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு

25 November 2020, 11:07 am
Quick Share

சென்னை : நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பதாகைகள் மற்றும் பேனர்களை மதியம் 12 மணிக்குள் அகற்ற சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம், தற்போது படிப்படியாக வலுவடைந்துள்ளது. நிவர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் அருகே இன்று மாலை கரையை கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தினால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், சில மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னையில் தொடர் கனமழை பெய்து வருகிறது. எனவே, புயல் பாதிப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மற்றும சென்னை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

புயல் கரையை கடக்கும் போது 145 கி.மீ. வரையில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், உயரமான பகுதிகளில் உள்ள பேனர்கள் மற்றும் பதாகைகளை சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பதாகைகள் மற்றும் பேனர்களை மதியம் 12 மணிக்குள் அகற்ற சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

Views: - 0

0

0