தி.மு.க. பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு..! பொன்முடி, ஆ.ராசாவிற்கு முக்கியப் பொறுப்பு..!

9 September 2020, 11:20 am
Stalin_ duraimurugan tr baalu - updatenews360
Quick Share

சென்னை : தி.மு.க.வின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர். பாலுவும் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.

தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக, முதல்முறையாக தி.மு.க. பொதுக்குழு கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில், அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் திமுக ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் மாநில அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், தி.மு.க.வின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர். பாலுவும் தேர்வு செய்யப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதன்மூலம், தி.மு.க. வரலாற்றில் 4வது பொதுச்செயலாளராக துரைமுருகனும், 8வது பொருளாளராக டி.ஆர். பாலுவும் தேர்வாகினர். இதைத் தொடர்ந்து,
இருவருக்கும் பொன்னாடை அணிவித்த மு.க.ஸ்டாலின், அவர்களுககு வாழ்த்துக்களையும் கூறினார்.

மேலும், மீண்டும் பொதுச்செயலாளருக்கான அதிகாரம் வழங்கும் விதமாகவும், கூடுதல் துணைப் பொதுச்செயலாளர்கள் நியமனம் செய்யும் வகையில் உட்கட்சி விதி திருத்தம் செய்யப்பட்டது. இதனடிப்படையில், ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். ஏற்கனவே ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் துணை பொதுச்செயலாளர்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 12

0

0