சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் : மருமகள் உள்பட 3 பேர் கைது..!!

13 November 2020, 10:55 am
Quick Share

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தலில் சந்த் (74) சென்னை சவுகார்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர், விநாயகம் மேஸ்திரி தெரு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் (40) ஆகியோருடன் வசித்து வந்தார். தலில் சந்த்தின் மகள் பிங்கி, திருமணமாகி, தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றார். தனது தந்தையுடன் நிதி நிறுவனத்தை நிர்வகித்து வந்த ஷீத்தலுக்கு திருமணமாகி, ஜெபமாலா என்னும் மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

கணவன், மனைவி இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக, ஷீத்தலை விட்டு பிரிந்து வாழும் ஜெபமாலா, புனேவில் உள்ள தனது தாயாரின் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 11ம் தேதி மாலை தலில் சந்திற்கு அவரது மகள் பிங்கி செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால், அவர் போனை எடுக்காததால், பிங்கி நேரடியாக வீட்டிற்கே வந்துள்ளார். அப்போது, வீட்டின் உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததால், அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்தவர்களின் உதவியுடன் கதவை திறந்து உள்ளே பார்த்ததில், தந்தை, தாய் மற்றும் சகோதரனும் குண்டு பாய்ந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் மெத்தை மீது கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

gun shoot - updatenews360

என்ன செய்வதென்று புரியாமல், தேம்பி தேம்பி அழுத நிலையில், யானை கவுனி போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றியதுடன், பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் இந்தப் பகுதியில், மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியது எப்படி..? என்றும், மீறி துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தால், எப்படி மற்றவர்களுக்கு தெரியாமல் இருந்தது..? என்பது குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் அருண்குமார், வடக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் விசாரிக்கத் தொடங்கினர். அந்த பகுதியில் முழுவதும் இரும்பு தடுப்பு அமைத்து போலீஸ் கண்காணிப்புக்குள் கொண்டு வந்தனர்.

மோப்ப நாயை வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் ஓடிச் சென்று நின்று விட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை பதிவுகளை பதிவு செய்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஒருவேளை ஷீத்தலின் மனைவி ஜெபமாலாதான் இந்த கொலைகளை செய்தாரா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

arrest_updatenews360

கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் ஜெபமாலா, விவகாரத்து வேண்டும் என விண்ணப்பித்திருப்பதுடன், ஜீவானம்சம் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், ஜெபமாலாவின் சகோதரர்கள் இருவர் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 10 முறை சென்னை வந்து, ஷீத்தலிடம் சொத்தை பிரித்துக் கொடுக்கும்படி தொந்தரவு கொடுத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, ஷீத்தலின் மனைவி ஜெபமாலாவின் குடும்பத்தினர்தான் இந்த கொலைகளை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு, ஜெபமாலாவை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஷீத்தலின் மனைவி ஜெபமாலா உள்பட 3 பேரை புனேவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை சென்னை அழைத்து வந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க உள்ளனர்.

Views: - 46

0

0