இது வெறும் டிரெய்லர்தான்… 500 வரைக்கும் கூட போகலாம்… கவனமா இருங்க ; சென்னைக்கு தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அலர்ட்..!!

Author: Babu Lakshmanan
11 November 2022, 10:41 am
Quick Share

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த சூழலில், வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக வரும் 13ம் தேதி வரை தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Rain - Updatenews360

அதிலும், குறிப்பாக, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட 3 வடதமிழக மாவட்டங்களில் அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், டெல்டா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு மின கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று மாலை முதலே சென்னையில் பரவலான மழை பெய்யத் தொடங்கியது. இன்று சென்னையில் நாள் முழுக்க மழை விட்டு விட்டு பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்பின் உள்மாவட்ட மழை அரபிக்கடல் நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. எனவே, 15ம் தேதி வரை புதுச்சேரி மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது :- சென்னையில் 13ம் தேதி வரை 3 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும். 14ம் தேதிக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக மழை பெய்யும். சென்னையில் இன்று கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 3 நாட்களில் 200- 300 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் சில இடங்களில் 400 – 500 மில்லி மீட்டர் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

இன்று மிக கனமழை அல்லது தீவிர கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக, கவனமாக இருக்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் மழையை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூரில் இருந்து சென்னை வரை கனமழை பெய்யும். மழை பகுதிகளான குன்னூர், கொடைக்கானலில் 12, 14ம் தேதிகளில் மழை பெய்யும் வாய்ப்புகளும் உள்ளன, எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 350

0

0