இன்று இரவு 7 மணியுடன் முடங்கும் சென்னை : மெட்ரோ சேவை ரத்து, விமான நிலையம் மூடல்..!!

25 November 2020, 5:41 pm
flight chennai - - updatenews360
Quick Share

சென்னை : நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று இரவு 7 மணியோடு, சென்னை மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது வலுவடைந்து அதி தீவிர புயலாக மாறியுள்ளது. நிவர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், இன்று நள்ளிரவு, புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. மேலும், புயலை கரையை கடக்கும் போது, 155 கி.மீ., வரையில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே, 2வது நாளாக பேருந்து, ரயில்சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது இன்று இரவு 7 மணியோடு மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், நாளை மெட்ரோ ரயில் இயக்கப்படுமா..? என்பது நிவர் புயல் கரையை கடந்த பிறகே தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சென்னை விமான நிலையமும் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையின் முக்கிய சாலைகளும் மூடப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மேல் சென்னைக்குள் வெளிமாவட்ட நபர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Views: - 20

0

0