ஒருநாள் பெய்த மழைக்கே ஒடிந்துபோன சென்னை நகரம்…. 2வது நாளாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

Author: Babu Lakshmanan
8 November 2021, 11:21 am
Stalin - inspection - updatenews360
Quick Share

சென்னை – துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தாலும், தலைநகர் சென்னையை உலுக்கி வருகிறது. நேற்று பெய்த கனமழைக்கு சென்னையின் முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. வடபழனி, நுங்கம்பாக்கம், தி நகர், போரூர், வளசரவாக்கம், அண்ணாசாலை, கோடம்பாக்கம், கோயம்பேடு, குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

நேற்று முதல்நாள் மட்டும் 207 மி.மீ. மழை சென்னையில் பெய்து இருக்கிறது. இதனால், வீடுகளுக்குள் மழை வெள்ளம் சூழ்ந்ததால் ஏழை, எளிய மக்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர். இதையடுத்து, எழும்பூர், பாடி உள்ளிட்ட 11 இடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில், சென்னையில் மழை பாதித்த இடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் 2வது நாளாக இன்றும் பார்வையிட்டு வருகிறார். துறைமுகம் தொகுதியில் கல்யாணபுரம் கால்வாய், கல்யாணபுரம் மருத்துவ முகாம், வுட்வர்ப் வாயில் எண். 4 ஆகிய இடங்களை பார்வையிட்டார். அவருடன் அமைச்சர்கள் சேகர் பாபு, கே என் நேரு ஆகியோர் உடன் சென்றனர்.

சென்னையில் நேற்று ஒரே நாளில் பெய்த கனமழையால், தேங்கிய வெள்ள நீரின் காரணமாக, சென்னை வாசிகளின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது. எனவே, இதுபோன்று கனமழை பெய்தால் சென்னை மாநகரம் மிதப்பதை ஆட்சியாளர்கள் அறிந்தும், அதற்கு தீர்வு காணாதது ஏன்..? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Views: - 390

0

0