கொரோனாவில் இருந்து குணமடைந்தார் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி…!!

16 November 2020, 2:10 pm
sahi highcourt - updatenews360
Quick Share

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட பலருக்கு கொரோனா உறுதியாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 12

0

0