சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி..!!

6 November 2020, 12:38 pm
ap sahi - updatenews360
Quick Share

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி நேற்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளோடு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், நுரையீரலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உள்ள தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Views: - 46

0

0