2 எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்தது நியாயமல்ல : சென்னை உயர்நீதிமன்றம்

3 February 2021, 6:24 pm
anna-university-updatenews360
Quick Share

சென்னை : 2 எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்தது நியாயமல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி உள்ளிட்ட இரு மேல் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நிறுத்தி வைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து நுழைவுத் தேர்வு எழுதிய மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்ற காரணத்தை காட்டி பணத்திற்காக படிப்பை ரத்து செய்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் செயல் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு ஏற்புடையதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் பேசி நல்ல முடிவை எடுக்குமாறு தெரிவித்தனர். நிதியுதவி ஏதேனும் தேவைப்பட்டால் தமிழக அரசை நாடவும் அறிவுறுத்தினார்.

மருத்துவப்படிப்பில் 69%. நடைமுறை கடைபிடிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு மட்டும் இந்த எம்.டெக். படிப்பில் மட்டும் ஏன் குழப்பம் என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை பிப்.,8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Views: - 0

0

0

1 thought on “2 எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்தது நியாயமல்ல : சென்னை உயர்நீதிமன்றம்

Comments are closed.