14ம் தேதி முதல் நீதிமன்றம் 50% பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும் ; தலைமை பதிவாளர் உத்தரவு

10 June 2021, 8:30 pm
Madras_High_Court_UpdateNews360
Quick Share

சென்னை : சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வரும் 14ம் தேதி முதல் 50 % பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும் என்று தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால், தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்ற நீதிமன்றம், நேரடியாக வழக்கை விசாரிக்கும் நடைமுறை நிறுத்தப்பட்டு, காணொலி மூலமாக நடைபெற்று வருகிறது.

மேலும், நீதிமன்ற ஊழியர்கள் இரு பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் இரண்டு நாட்கள் பணி என சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என்று தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மற்றவர்கள் பணிக்கு வரத் தயாராக வீட்டில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 107

0

0