கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்..!!!

2 March 2021, 1:48 pm
Kamal - updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை நடிகர் கமல்ஹாசன் போட்டுக் கொண்டார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையிலும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நேற்று முதல் தொடங்கியது. முதல் நாளில் மட்டும் 1.25 லட்சம் பேர் ஊசி போட்டுக் கொண்டனர். மேலும், 45 வயதுக்கு மேற்பட்டு இணை நோயுள்ள 18 ஆயிரத்து 850 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி, குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரும் முதல் நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை நடிகர் கமல்ஹாசன் போட்டுக் கொண்டார்.

Views: - 10

0

0