தொடர் கனமழையால் நிரம்பும் சென்னையின் நீராதார ஏரிகள் : கண்காணிக்க மத்திய நீர்வளத்துறை அறிவுறுத்தல்..!!

12 November 2020, 5:52 pm
poondi lake - updatenews360
Quick Share

தொடர் கனமழை பெய்து வருவதால் ஏரிகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சென்னையில் உள்ள ஏரிகளை கண்காணிக்குமாறு மத்திய நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

வடகிழக்கு பருவமழையினால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் பெய்த கனமழைக்கு, சென்னை மாநகரமே ஸ்தம்பித்தது. இந்த மழையினால் சென்னைக்கு நீராதாரமாக திகழும் ஏரிகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தற்போது, இலங்கை அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையினால், அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சியும், அரசும் முடுக்கி விட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, சென்னையின் நீராதாரமான செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை கண்காணிக்குமாறு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகமான மழை இருப்பதால் நீர்நிலைகளை கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 30

0

0

1 thought on “தொடர் கனமழையால் நிரம்பும் சென்னையின் நீராதார ஏரிகள் : கண்காணிக்க மத்திய நீர்வளத்துறை அறிவுறுத்தல்..!!

Comments are closed.