கட்சியின் பெயரை பயன்படுத்தவதில் தகராறு… தமுமுக – மமக இடையே வெடித்த மோதல் ; அதிர்ச்சியில் ஜவாஹிருல்லா..!!(வீடியோ)

14 July 2021, 6:27 pm
Chennai mmk fight - updatenews360
Quick Share

சென்னை : கட்சியின் பெயரை பயன்படுத்துவதில் எழுந்த பிரச்சனையில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொண்டர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார். இவரது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக ஹைதர் அலி செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், ஹைதர் அலியை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த ஹைதர் அலி தரப்பினருக்கு, மேலும் கோபத்தை அதிகப்படுத்தும் விதமாக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த நீதிமன்றம் மூலம் இடைக்காலத் தடையையும் பிறப்பிக்கப்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த ஹைதர் அலி தரப்பினர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சுருக்கமான த.மு.மு.க. என்னும் பெயரை வர்த்தகக்குறி சட்டத்தின்கீழ் பதிவு செய்தனர். இதையடுத்து, ஜவஹிருல்லா தரப்பினருக்கு வெறுப்பை ஏற்றும் விதமாக, சென்னை மண்ணடியில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அருகிலேயே த.மு.மு.க. என்னும் சுருக்கமான பெயர் பலகையுடன் புதிய அலுவலகத்தை ஹைதர் அலி தரப்பினர் திறந்துள்ளனர். அதோடு, அங்கு வைக்கப்பட்ட பேனரில் த.மு.மு.க. தலைமை அலுவலகம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஹைதர் அலி ஆதராவளர்களின் இந்த செயலால் கடுப்பான ஜவாஹிருல்லா தரப்பினர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரித்த போலீசாருடம், சட்டப்படி, பெயரை பதிவு செய்திருப்பதால், பேனரை அகற்ற முடியது எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர், ஹைதர் அலி தரப்பு அலுவலகத்துக்கு நேற்றிரவு சென்றனர். அப்போது, பேனரை அகற்றுமாறு அவர்கள் கூறியுள்ளன்ர். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. பின்னர், மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், ஒருவரையொருவர் கல்வீசித் தாக்கிக் கொண்டனர். மேலும், அங்கிருந்த பேனர் கிழிக்கப்பட்டு, ஹைதர் அலி தரப்பு அலுவலகம் சூறையாடப்பட்டது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், இரு தரப்பினர் மீதும் லேசான தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இந்நிகழ்வில் ஒரு காவலர் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.

கட்சியின் பெயரை பயன்படுத்துவதில் ஏற்பட்ட தகராறில், ஒரே அமைப்பு மற்றும் கட்சியைச் சேர்ந்த இஸ்லாமிய நிர்வாகிகள் மாறி மாறி அடித்துக் கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 211

0

0