இதுவே கடைசியா இருக்கனும்.. இனி ஆட்டம்போட்டால் அவ்வளவுதான்.. திமுக பெண் கவுன்சிலர்ளுக்கு சென்னை மேயர் வார்னிங்..!!!

Author: Babu Lakshmanan
1 April 2022, 2:46 pm
Quick Share

சென்னையில் திமுக பெண் கவுன்சிலர்களின் கணவர் மற்றும் உறவினர்கள் அராஜகத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை மேயர் பிரியா புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் 51வது வார்டு மாமன்ற உறுப்பினர் நிரஞ்சனா என்பவரின் கணவர் ஜெகதீஷன், இரவு ரோந்து வந்த போலீசாரை ஆபாசமான வார்த்தைகளில் திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அந்த வீடியோவில், அவரும், அவரது ஆதராவளர் ஒருவரும் தரக்குறைவான வார்த்தைகளில் போலீசாரை திட்டித் தீர்த்ததும், ஆளும் கட்சி பிரமுகர் என்பதால்,செய்வதறியாது போலீசார் நின்றது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

காவலரை தரக்குறைவாக பேசி இழிவுபடுத்திய கவுன்சிலரின் கணவர் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களை கைது செய்ய வேண்டுமென மக்கள் சமூகவலைதளத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஏற்கனவே, சென்னை பல்லாவரம் அருகே மாமூல் தராத கடைகளை திமுக கவுன்சிலரின் கொழுந்தன் அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல, புளியந்தோப்பு பகுதியில் திமுக கவுன்சிலரின் கணவர், வீடுகட்டிக் கொண்டிருக்கும் பெண்ணிடம் கமிஷன் கேட்ட வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது.

இப்படியிருக்கையில், திமுக கவுன்சிலர்களின் உறவினர்கள் தொடர்ந்து, இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபட்டு வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை உருவாக்கியது. மேலும், திமுகவின் கவுன்சிலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சியினர் வலியுறுத்தினர்.

மேலும், எதிர்கட்சிகள் சொல்வதைப் போன்று திமுக ஆட்சிக்கு வந்தால், கட்டப்பஞ்சாயத்துக்களும், அடிதடியும் அதிகரித்து வருவது போன்ற விமர்சனங்கள் தமிழக அரசின் மீது வைக்கப்பட்டன.

இந்த நிலையில், பெண் மாமன்ற உறுப்பினர்களின் கணவர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது தலைமை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் எச்சரித்துள்ளார். யாருக்கு பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறதோ, அவர்கள்தான் தங்கள் பணியை செய்ய வேண்டும் என்றும், அதை மீறி அவர்களது கணவர்கள் அவர்களை தவறாக வழி நடத்தினால், அவர்கள் மீது தலைமை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

Views: - 619

0

0