7ம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயில் இயக்கம் : நேர அட்டவணை வெளியீடு..!

3 September 2020, 2:14 pm
chennai metro rail 01 updatenews360
Quick Share

சென்னையில் வரும் 7ம் தேதி முதல் மெட்ரோ ரயில்சேவை இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான நேர அட்டவணையும் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 6 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 4வது கட்ட தளர்வில் மெட்ரோ ரயில்களை இயக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கின.

இந்த நிலையில், மெட்ரோ ரயில் இயக்குவதற்கான நேர அட்டவணையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், வரும் 7ம் தேதி சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப் பேட்டை வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும். 9ம் தேதியன்றில் இருந்து புனித தோமையார் மாலை முதல் சென்ட்ரல் வரையிலும், பரங்கிமலை- சென்ட்ரல் வரையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அலுவலக நேரமான காலை 8.30 முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 8 வரையிலும் 5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். அலுவலக நேரம் இல்லாத மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

ஒவ்வொரு ரயில்நிறுத்தத்திலும் 20 விநாடிகளுக்கு பதிலாக 50 விநாடிகள் ரயில்கள் நிறுத்தி இயக்கப்படும். ஸ்மார்ட் கார்டு மற்றும் QR கோடு முறையில் டிக்கெட் வழங்கப்படும். மெட்ரோ ரயிலில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். லிப்ட்டில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் மூன்று பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0