சென்னை : போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்தில் போக்குவரத்து துறை ஆணையரக அலுவலகத்தில் இணை ஆணையரக மற்றும் துணை ஆணையரக அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், அலுவலகத்தில் உள்ள 30 உதவியாளர்களிடம் இருந்து கணகாணிப்பாளர் பதவி உயர்வுக்காக ரூ.5 லட்சம் பெறுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில், துணை ஆணையர் நடராஜன் என்பவரின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது அவரது அலுவலகத்தில் உள்ள பணம் எண்ணும் எந்திரம் இரண்டை எடுத்து சென்று சோதனை செய்தனர்.
அதில் கணக்கில் வராத ரூ.35 லட்சம் ரொக்க பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர். தை அடுத்து லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனையின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சென்னை துணை போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் ரூபாய் 35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆணித்தரமான கருத்துக்களை காமெடி மூலமாக கொண்டு…
கமல்ஹாசனா இப்படி செய்தது? தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் இன்னும் அவரது ரசிகர்களின் மனதில் உலக நாயகனாகவே…
பொதுவெளியில் பிரபலங்களுக்கு திடீரென சங்கடங்கள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் ஒரு சிலர் அணிந்து வரும் ஆடையும் அப்படி சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.…
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
This website uses cookies.