17 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…! சென்னை வானிலை மையம் அறிவிப்பு

3 August 2020, 12:49 pm
Quick Share

சென்னை: 17 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

சில வாரங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை கொட்டி வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையின் பல பகுதிகளில் இரவு முழுவதும் மழையானது விடாமல் கொட்டி தீர்த்தது. இந் நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது: தெற்கு ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியின் காரணமாக இந்த காற்றழுழுத்த தாழ்வு நிலை உருவாகும்.

மேலும் கோவை மற்றும் நீலகிரி பகுதியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடற்கரையோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்யும்.

அதாவது 17 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. எனவே கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தமது அறிவிப்பில் கூறி உள்ளது.