சென்னையில் தொடரும் கனமழை : மண்டல வாரியான உதவி எண்களை வெளியிட்டது மின்சார வாரியம்..!!

24 November 2020, 5:32 pm
rain helpline - - updatenews360
Quick Share

சென்னை : நிவர் புயலினால் சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், புயல்‌ கட்டுப்பாட்டு உதவி மையம்‌, மீட்பு நடவடிக்கைகாக மண்டல வாரியான உதவி எண்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம், தற்போது படிப்படியாக வலுவடைந்துள்ளது. நிவர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் அருகே நாளை கரையை கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன் தாக்கத்தினால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், சில மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது முதலே கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளம் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனிடையே, நிவர் புயல் காரணமாக, நாளை அரசு விடுமுறை அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகம்‌, நிவர்‌ புயல்‌ கட்டுப்பாட்டு உதவி மையம்‌, மீட்பு நடவடிக்கைகாக இன்று முதல்‌ அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள்‌ 24 மணி நேரமும்‌ கீழ்கண்ட தொலைபேசி மற்றும்‌ அலைபேசி எண்கள்‌ தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு உதவி மையத்தில்‌ பெறப்படும்‌ மின்சாரம்‌
சம்பந்தமான புகார்களின்‌ மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென இதன்‌ மூலம்‌ தெரிவித்துக்‌
கொள்ளப்படுகின்றது.

Views: - 22

0

0