தமிழகத்துக்கு நிதி தர மறுக்கும் மத்திய அரசு…! முதலமைச்சர் குற்றச்சாட்டு

23 May 2020, 7:55 pm
Edappady 14 updatenews360
Quick Share

சேலம்: தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்க மத்திய அரசு மறுப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சேலத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், குடிமராமத்து பணிகள் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. தமிழகம் தான் தேசிய அளவில் கொரோனா தடுப்பு பணியில் முதன்மை மாநிலமாக இருக்கிறது.

கொரோனா தடுப்பு பணிக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. ஊரடங்கால் ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ளதால், அதனை ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. புகாரில் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்டாலின் எதற்காக அரசை கண்டித்து அறிவிக்கை வெளியிடுகிறார்? பொய் புகார் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply