“கண்டிப்பா தம்பி“ : டிவிட்டரில் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்!!

25 November 2020, 1:48 pm
CM Twit - Updatenews360
Quick Share

சென்னை : நிவர் புயலால் சேதடைந்த மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றிய காட்சிகள் டிவிட்டரில் பதிவு செய்த போது நெட்டிசன் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் கூறிய பதில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

தொடர் மழை மற்றும் புயல் காரணத்தால் சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்து வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் மக்களுக்கு இடையூறாக உள்ள மரங்களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்த வீடியோவை முதலமைச்சர் பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மொத்தம் 6 மரம் அறுக்கும் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டார்.

இதையடுத்து முதலமைச்சரின் ட்விட்டுக்கு ஷ்யாம் என்பவர், இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்ததும், மீண்டும் மரம் நட்டு வையுங்கள் என கோரிக்கை விடுத்திருந்தார். உடனே இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் “கண்டிப்பாக தம்பி“ என கூறியுள்ளார்.

ஒரு பக்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நேராக களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர், மறுபுறம் மக்களின் கேள்விகளுக்கு உடனே பதிலளித்து வருவதும் மக்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Views: - 0

0

0